[உபுண்டு தமிழகம்]மடலாடற் குழுவிற்கான நெறிகள்...
amachu
amachu at ubuntu.com
Tue Jan 1 06:08:29 GMT 2008
1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.
2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.
3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.
4. மடலுரையின் அடியொற்றி பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.
உ.ம்:
> தங்களுக்குப் பிடித்த இயங்கு தளம்?
உபுண்டு
5. ஹச்.டி.எம்.எல் மடல்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
6. மடலோடு இணைப்புகளை அனுப்புவதை முற்றிலும் தவிர்க்கவும்.
பரிந்துரைக்கப் படும் நெறி: திரைக் காட்சிகள் போன்றவற்றை பிஃலிக்கர் போன்ற இணைய
தளங்களின் உதவி கொண்டு பதிவேற்றி அதன் முகவரியினை மடலில் பயன்படுத்தலாம்.
7.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத
விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும்
அல்லது ஜிமேன் வசதிகளைப் பயன்படுத்தவும்.
முகவரி -> http://blog.gmane.org/gmane.linux.ubuntu.user.tamil
நன்றி.
--
அன்புடன்,
ஆமாச்சு
மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது
சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080101/f15e66b7/attachment.pgp
More information about the Ubuntu-tam
mailing list